சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்; 18-ந் தேதி நடக்கிறது தேரோடும் வீதிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வேம்பன்பட்டி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. தேேராடும் வீதிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தர்வகோட்டை:
சுப்பிரமணியர் சுவாமி கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி கிராமத்தில் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டெண்டர் விடப்பட்டு இன்னும் சாலை போடப்படாமல் இருந்தது. திடீரென திருவிழா நேரத்தில் சாலை போடுவதாக சாலையில் ஜல்லிக் கற்களை பரப்பி மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது.
சாலையை சீரமைக்க வேண்டும்
மேலும் கோவில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற திடலில் சாலை போடுவதற்கான ஜல்லிக்கற்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் திருவிழா தடைபடுகின்றன நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைத்து ஜல்லிக் கற்களை அகற்றி சுப்பிரமணியர் சுவாமி கோவில் தேரோட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story