மாட்டு வண்டி பந்தயம்
திருவாடானை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா வெள்ளையபுரத்தில் திருவாடானை வட்டார பந்தய மாட்டுவண்டி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் வெள்ளையபுரம் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சார்பில் 2-ம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தமிழ்நாடு ரேக்ளா சங்க தலைவர் மோகன்சாமி குமார் தலைமை தாங்கினார். இதில் பெரியமாடு, நடுமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கபரிசு மற்றும் பரிசு கோப்பைகளும் மாட்டு வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கு எல்கை பரிசுகளும் மாட்டு வண்டிகளுக்கு சிறப்பு முதல் பரிசும் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாட்டு வண்டிகளுக்கு வெற்றிக்கோப்பைகளை ஊராட்சி தலைவர்கள் ஐயப்பன் பரக்கத்அலி, மோகன்ராஜ், முத்துராமலிங்கம், பவுலின் அருள்சாமி, குமார், அமுதா பால்சாமி, நிரோசா கோகுல், ஆகியோர் வழங்கினார்கள். சுமார் 8 மைல் தூரம் சென்று வந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பந்தயம் மாட்டு உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் விவேக் சிவசாமி, செயலாளர் அஜ்மல்கான், பொருளாளர் பிரபாகர், இணைச் செயலாளர் உமர் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story