என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
தோகைமலை அருகே என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தோகைமலை,
என்ஜினீயர்
தோகைமலை அருகே ப.உடையாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரூபன் ஆரோக்கியராஜ் (வயது 31). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி கோகிலாவுடன் கோவையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கோகிலாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர்கள் ப.உடையாபட்டியில் உள்ள வீட்டில் கடந்த 3 மாதங்களாக வசித்து வந்தனர். கடந்த 6-ந் தேதி ரூபன் ஆரோக்கியராஜ் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் கோவைக்கு சென்றார்.
நகை திருட்டு
நேற்று முன்தினம் ரூபன் ஆரோக்கியராஜ் தாயார் கோவையில் இருந்து ப.உடையாபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்றபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story