புதுக்கோட்டையில் பாம்பே சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களை கண்டு பொதுமக்கள் வியப்பு


புதுக்கோட்டையில் பாம்பே சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களை கண்டு பொதுமக்கள் வியப்பு
x
தினத்தந்தி 13 March 2022 12:40 AM IST (Updated: 13 March 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் பாம்பே சர்க்கஸ் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் ஆலங்குடி ரோட்டில் அய்யனார் திடலில் கிரேட் பாம்பே சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. நூறாண்டுகள் பழமையான, புகழ் பெற்ற சர்க்கஸ் நிறுவனமான இதில் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பல்வேறு சாகசங்களை செய்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். உயிரை பணயம் வைத்து கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தின் மேல் படுத்தும், அவர் மேல் மற்றொரு கலைஞரும் அமர்வதும், அந்தரத்தில் தலைகீழாக பெண் கலைஞர் நடந்து செல்வது, பெண் கலைஞரின் ரிங் நடனம், பொழுதுபோக்கிற்காக கோமாளிகளின் அரட்டைகளும், நகைச்சுவை நிகழ்ச்சிகளும் பொதுமக்களை மகிழ்ச்சியில் வைக்கிறது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. புதுக்கோட்டையில் பொழுதுபோக்கு அம்சம் எதுவும் இல்லாத வகையில் இந்த சர்க்கஸ் பொதுமக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டையை கலக்கி வரும் இந்த சர்க்கஸ்க்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி ஆகிய 3 காட்சிகளும் நடைபெறுகிறது.

Next Story