விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம்
காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கூட்டம் மாநில தலைவர் மாரிமுத்து தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது.
சிவகங்கை,
காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் கூட்டம் மாநில தலைவர் மாரிமுத்து தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அர்ஜுனன் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் முருகேசன், பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் பாருக், முருகேசன், அய்யனார், முருகன், மலைச்சாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மத்திய அரசு நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே காவிரி, வைகை, குண்டாறு, இணைப்பு திட்டத்தில் காவிரி உபரி நீரை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்ததன் மூலம் பின்தங்கிய புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த மாபெரும் தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டத்தை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கபட்டது. முடிவில் அய்யனார் நன்றி. கூறினார்.
Related Tags :
Next Story