விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி


விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி
x
தினத்தந்தி 13 March 2022 12:57 AM IST (Updated: 13 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி நடைபெற்றது

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி, கென்னடி செபாஸ்டின், உதவி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். 

விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய உழவியல் மற்றும் துறைத்தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன், மரபியல் உதவி பேராசிரியர்  மகாலிங்கம், பூச்சிகள் உதவி பேராசிரியர் விஜயராகவன், உளவியல் உதவி பேராசிரியர் அரிசுதன் ஆகியோர் கலந்து கொண்டு, நெல் அறுவடைக்குப் பிறகு பயறு வகைளை பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டுவதற்கான  தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து பேசினர். 

கூட்டத்தில் வேளாண்மை உதவி அலுவலர்கள் பழனிவாசகம், ராஜா சின்னமணி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விதை சான்று உதவி அலுவலர் அருள் நன்றி கூறினார்.

Next Story