விபத்தில் பெண் சாவு


விபத்தில் பெண் சாவு
x
தினத்தந்தி 13 March 2022 1:00 AM IST (Updated: 13 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பெண் உயிரிழந்தார்

பேரையூர், 
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் நரிக்குடியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 32). இவருடைய மனைவி கற்பகவள்ளி (28). சம்பவத்தன்று இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பாப்புநாயக்கன்பட்டி- சோலைபட்டி சாலையில் வந்த போது சாலையின் குறுக்கே மாடு வந்தது. இதனால் பிரேக் பிடித்த போது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் கற்பகவள்ளி பரிதாபமாக இறந்தார். உதயகுமார் படுகாயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story