610 கிலோ பட்டாசு பறிமுதல்
வத்திராயிருப்பு அருகே 610 கிலோ பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
வத்திராயிருப்பு,
பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமீறல்களை தடுப்பதற்காக சிறப்பு ஆய்வு குழுக்கள் நியமனம் செய்து, கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் ெரங்கசாமி தலைமையில், சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் குமரேஷ், விருதுநகர் தீயணைப்பு தடுப்புக்குழு நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வத்திராயிருப்பு அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தில் ஒரு இடத்தில் மாட்டுத்தொழுவத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 610 கிலோ பட்டாசுகளையும், சரக்கு ஆட்டோவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவிந்தநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைதுரை மூலம் நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரக்கு ஆட்டோ ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பாலமுருகன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story