தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2022 1:30 AM IST (Updated: 13 March 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

பஸ் வசதி செய்து தரப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் இருந்து தஞ்சைக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் ஏராளமானோர் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் போதிமான பஸ்கள் இயக்கப்படாததாக கூறப்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ்கள் கிடைக்காமல் கூட்ட நெரிசலில் பயணம்செய்யும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் நிலை உள்ளது.  இதனால் அந்த பகுதி பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலை மாலை என இருவேளையும் போதிய பஸ்வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
-பொதுமக்கள், கறம்பக்குடி. 
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் டவுன் பெரிய தெரு உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வானங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர்.  இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.


Next Story