தேசிய மதிப்பீடு, தரச்சான்று குழுவினர் நாளை ஆய்வு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய மதிப்பீடு, தரச்சான்று குழுவினர் நாளை முதல் 3 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய கல்வித்துறை, பெங்களூருவில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினர் நாளை(திங்கட்கிழமை) முதல் 16-ந்தேதி வரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் ஆய்வு செய்கிறார்
7 பேர் கொண்ட இக்குழுவில் பல்வேறு துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, கல்வித்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அளவீடு செய்து தரச்சான்று வழங்க உள்ளார்கள்.
ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் 3 முறை தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் 2000-ம் ஆண்டில் 4 நட்சத்திரம், 2007-ம் ஆண்டில் B++, 2014-ம் ஆண்டில் A கிரேடு ஆகிய தரச்சான்றை பெற்றுள்ளோம். தற்போது 4-வது முறையாக நடைபெறும் இந்த ஆய்வில், A++ அந்தஸ்தை பெறுவதே எங்கள் குறிக்கோள் ஆகும் என்றார்.
பேட்டியின் போது பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story