மைதானம் தரமாக அமைக்கக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மைதானம் தரமாக அமைக்கக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மைதானம் தரமாக அமைக்கக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் இளைஞர்கள் - பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கணபதி நகர் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் வாயிலில் நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் காதர் உசேன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை, ஏசுராஜா, மாணவர் சங்க மாநில துணை செயலாளர் அரவிந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சரவணன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தரமாக அமைக்க வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில், 'அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் சர்வதேச ஓடுதளம் அமைக்கும் பணியில், ஐகோர்ட்டு ஆணைப்படி வல்லுனர் குழுவை அமைத்து அதன் கண்காணிப்பில் செயல்படுத்த வேண்டும். பணிகளில் உள்ள தவறுகளை சரி செய்ய வேண்டும்.
பணிகளின் திட்ட மதிப்பீட்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும். பொறியாளர்கள், உயரதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்று, பணிகள் முறையாக நடக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து மைதானத்தை குப்பைக் கழிவுகளைக் கொண்டு அமைக்காமல் தரமான மண் கொண்டு தளம் அமைக்க வேண்டும்.
பணிகளை கண்காணிக்க குழு
பணிகளைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்" என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜூன், வாலிபர் சங்க மாநகரத் தலைவர் ஹரிபிரகாஷ், அருண்குமார், கரிகாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story