சீரான குடிநீர் வினியோகிக்கப்படுமா?
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் வினியோகம்
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகர், எஸ்.ஆர்.நாயுடு நகர், என்.ஜி.ஓ. காலனி மற்றும் பாரதி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அதேபோல 24 மணி நேர தடையில்லா மின்சார வசதியும் உள்ளது.
இருக்கன்குடி அணை
குடிநீர் ஆதாரமான இருக்கன்குடி அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஆனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்ைல. சில இடங்களில் ஒரே குழாயிலிருந்து மேடு மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு பிரித்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான தெருக்களில் உள்ள இணைப்புகளுக்கு மிகவும் வேகமாக குடிநீர் செல்கிறது. மேடான சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.
இதனை கேட் வால்வு அமைத்து சரி செய்ய வேண்டும். மிகவும் முக்கியமாக குழாய் உடைப்புகள், கசிவுகள் சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மறுநாளே கசிவுகள் ஏற்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் சீரான குடிநீர் வினிேயாகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story