அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை
அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ராஜபாளையம்,
அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
சேத்தூர் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்ற வாக்களித்து நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்கள். மேலும் நம்மை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்ற வேண்டும்.
நலத்திட்டங்கள்
பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வசதி, தெருவிளக்குகள் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து தெருக்களையும் சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்கோபு, செட்டியார்பட்டி செயல் அலுவலர் சந்திரகலா, சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பாலசுப்பிரமணியன், செட்டியார்பட்டி பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், துணை சேர்மன் காளீஸ்வரி, விநாயகமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் சிங்கம்புலி அண்ணாவி, இளங்கோவன், கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story