துணி அனுப்புவதாக கூறி இலங்கை தொழில் அதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி; சென்னிமலை ஜவுளி வியாபாரி மீது போலீசில் புகார்

துணி அனுப்புவதாக கூறி இலங்கை தொழில் அதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி; சென்னிமலை ஜவுளி வியாபாரி மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 13 March 2022 2:30 AM IST (Updated: 13 March 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

துணி அனுப்புவதாக கூறி இலங்கை தொழில் அதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சென்னிமலை ஜவுளி வியாபாரி மீது இ மெயில் மூலம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

சென்னிமலை
துணி அனுப்புவதாக கூறி இலங்கை தொழில் அதிபரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சென்னிமலை ஜவுளி வியாபாரி மீது இ மெயில் மூலம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழில் அதிபர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த ஒருவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். 
 இதேபோல் இலங்கையை சேர்ந்தவர் அப்துல் அஷ்ரப் முகமது ரஹீம். தொழில் அதிபர். இவருக்கும், சென்னிமலை ஜவுளி வியாபாரிக்கும் இடைேய பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
ரூ.41 லட்சம்
இதைத்தொடர்ந்து டெக்ஸ்டைல் துணி வகைகளை வாங்குவதற்காக சென்னிமலை ஜவுளி வியாபாரியிடம் அப்துல் அஷ்ரப் முகமது ரஹீம் தொடர்பு கொண்டு உள்ளார். இதையடுத்து துணிகளை இலங்கைக்கு அனுப்ப சென்னிமலை ஜவுளி வியாபாரி ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதற்காக சென்னிமலை ஜவுளி வியாபாரியின் வங்கி கணக்கில் இரு தவணைகளாக அப்துல் அஷ்ரப்      முகமது ரஹீம்  ரூ.41 லட்சம் செலுத்தி உள்ளார். 
விசாரணை
ஆனால் இந்த பணத்திற்கான துணி வகைகளை சென்னிமலை ஜவுளி வியாபாரி இலங்கைக்கு அனுப்பாமல் இருந்து உள்ளார். தான் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டோம்  என்பதை உணர்ந்த அப்துல் அஷ்ரப் முகமது ரஹீம், இதுபற்றி இ மெயில் மூலமாக சென்னிமலை போலீசில் புகார் அளித்தார். 
அதன்பேரில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story