மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கார்பெண்டர் சுறா மீன்
மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கார்பெண்டர் சுறா மீன்
மங்களூரு:
உடுப்பி மாவட்டம் மல்பேயில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் அரபிக்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது மீனவர்களின் வலையில் ஒரு அரிய வகை மீன் சிக்கியது.
அந்த மீன் சுமார் 250 கிலோ எடை இருந்தது. அது அரிய வகையான ‘கார்பெண்டர் சுறா’ மீன் ஆகும். இதன் வாய் மட்டும் நீண்டு இருக்கும். இதுபற்றி அறிந்ததும், அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு அரிய வகை மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story