ஈரோடு மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில் 413 பேருக்கு சிகிச்சை; முதல்-அமைச்சருக்கு பாராட்டு


ஈரோடு மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில் 413 பேருக்கு சிகிச்சை; முதல்-அமைச்சருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 13 March 2022 3:03 AM IST (Updated: 13 March 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டத்தில் 413 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த திட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டத்தில் 413 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த திட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர் முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
நம்மை காக்கும் 48
தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் 609 ஆஸ்பத்திரிகளில் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 38 தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 4 அரசு ஆஸ்பத்திரிகளிலும் என மொத்தம் 42 ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்தப்படுகிறது.
விபத்தில் சிக்குண்டு பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க 48 மணி நேரம் ஆகும் செலவை தமிழக அரசு ஏற்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தரமான உயிர்காக்கும் சிகிச்சை கிடைக்கிறது. பின்னர் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், அல்லது வேறு காப்பீட்டு திட்டங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் சிசிச்சை பெறலாம்.
413 பேர் மீட்பு
ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 413 பேர் உயிரிழப்பில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் 34 பேரும், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 233 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 146 பேரும் சிகிச்சை பெற்று உள்ளனர். இவர்களுக்காக தமிழக அரசு மொத்தம் ரூ.65 லட்சத்து 14 ஆயிரத்து 950 வழங்கி உள்ளது.
இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் அந்தியூர் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 32), பெருந்துறை பெத்தாம்பாளையம் திருவேங்கடமலைப்புதூர் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (60), கோபியை சேர்ந்த கீதா (48) ஆகியோர் தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
இதுபோல் அவர்களின் குடும்பத்தினரும், விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சைக்காக தமிழக அரசு நிதி வழங்கி உயிரை பாதுகாத்ததற்கான நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

Next Story