முதியவரை தாக்கிய பெயிண்டர் கைது
முதியவரை தாக்கிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு(வயது 60). அதே தெருவைச் சேர்ந்தவர் முரளி(36). பெயிண்டர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்கராசு வீட்டிற்கு கடப்பாக்கல் இறக்குவதற்காக முரளிைய கூப்பிட்டு இறங்கியுள்ளனர். பின்னர் தங்கராசு தனது வீட்டிற்கு வெளியூரில் இருந்து பெயிண்டரை வரவழைத்து, பெயிண்ட் அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முரளி, தன்னை வேலைக்கு கூப்பிடவில்லை என்ற காரணத்தால் தங்கராசு வீட்டிற்கு சென்று அவரை திட்டி, அருகில் இருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தங்கராசு காயமடைந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story