மந்திரி பதவி கொடுத்தால் ஏற்க மாட்டேன்-ஜெகதீஷ் ஷெட்டர்
மந்திரி பதவி கொடுத்தால் ஏற்க மாட்டேன் எனறு ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்
பெங்களூரு:
உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்துள்ளதால் கர்நாடக மந்திரிசபையை மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
5 மாநில தேர்தலில், 4 மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
கர்நாடக மந்திரிசபையை மாற்றியமைக்க முதல்-மந்திரி முடிவு செய்திருக்கிறார். மந்திரிசபையில் யாரை சேர்ப்பது, மந்திரி பதவியில் இருந்து யாரை நீக்குவது என்பது குறித்து முதல்-மந்திரி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்க மாட்டேன்.
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று சொல்கிறார்கள். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது. காங்கிரஸ் கட்சியில் 2 சித்து இருக்கிறார்கள். ஒருவர் பஞ்சாப்பில் காங்கிரசை காணாமல் செய்துவிட்டார். மற்றொரு சித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை காணாமல் செய்து விடுவார்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Related Tags :
Next Story