தூய்மை பணியாளர் திடீர் சாவு


தூய்மை பணியாளர் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 March 2022 6:17 AM IST (Updated: 13 March 2022 6:17 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே தூய்மை பணியாளர் திடீரென இறந்தார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 34). இவர் மருதம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து, வலியால் அவதிப்பட்டு வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்தபோது காளிமுத்து திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அவரை மீட்டு உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story