சென்னை விமான நிலையத்தில் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி தொடக்க விழா
சென்னை மீனம்பாக்கம் விமான வழித்தட முறை பணிகள் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இணைய நெறிமுறையில் இயங்கும் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு தென் மண்டல விமான நிலையங்களின் ஆணையக இயக்குனர் மாதவன் தலைமை தாங்கினார். சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், தகவல் பரிமாற்றம் மற்றும் கட்டுப்பாட்டு அறை பொது மேலாளர்கள் முத்து, முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் பரிமாற்ற நவீன கருவியை இந்திய விமான நிலையங்கள் ஆணைய சேவைகள் குழு உறுப்பினர் எம்.சுரேஷ் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப வல்லுனர்கள், மற்ற மென்பொருள் உதவி இன்றி புதிய தானியங்கி தகவல் பரிமாற்ற கருவியை உருவாக்கி உள்ளனர். உள்நாட்டில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவி மூலம் உலகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு இடையே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தகவல்கள், வானிலை தகவல்கள், விமான பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல்களை அதிவேகத்தில் பரிமாறி கொள்ள முடியும்” என்றனர்.
Related Tags :
Next Story