தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை திடீர் சாவு


தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 13 March 2022 5:00 PM IST (Updated: 13 March 2022 5:00 PM IST)
t-max-icont-min-icon

45-வது நாள் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 25). மெட்ரோ ரயில் நிலைய காவலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு ரித்திஷ்(3) என்ற மகன் உள்ளான். கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி பிரியாவுக்கு 8 மாதத்தில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக இருந்ததால் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் ‘இன்குபேட்டரில்’ வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டு, 15 நாட்கள் கழித்து குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் 45-வது நாள் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் வீட்டுக்கு வந்து பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை மயக்க நிலையில் இருந்தது. இதனால் பயந்து போன பெற்றோர், ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலவீனமான குழந்தைக்கு தடுப்பூசி போட்டதால் இறந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story