தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது


தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது
x
தினத்தந்தி 13 March 2022 5:25 PM IST (Updated: 13 March 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கி நடந்து வருகிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி ராஜகோபால் நகர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இரவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு தீர்த்தக்கரை செல்லுதல், இரவு 7 மணிக்கு பரிகார மூர்த்திகளும் அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெறும். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை டூவிபுரம் விநாயகர் கோவிலில் இருந்து நையாண்டி மேளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், அன்று இரவு முளைப்பாரி எடுத்து வருதல், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 3 மணிக்கு பொங்கலிடுதல், 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மாலை 5 மணிக்கு முளைப்பாரி அலசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முத்தாரம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து உள்ளனர்.

Next Story