அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 13 March 2022 5:35 PM IST (Updated: 13 March 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலப்பாதையை சுத்தம் செய்ய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலப்பாதையை சுத்தம் செய்ய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். 

இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

 ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று கிரிவலம் செல்கிறார்கள்.

அன்றை தினம் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சி அளிக்கும். விடுமுறை தினத்திலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். 

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

சில பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவில் வளாக பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குப்பைகள்

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் சிலர் கிரிவலம் செல்கின்றனர். கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

 எனினும் சில பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். தற்போது கிரிவலப பாதை களையிழந்து காணப்படுகிறது.

 கிரிவலப்பாதை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

 கிரிவலப்பாதையை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story