திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில்கடுமையான போக்குவரத்து நெரிசல்


திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில்கடுமையான போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 13 March 2022 6:17 PM IST (Updated: 13 March 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில்கடுமையான போக்குவரத்து நெரிசல்

விடுமுறை மற்றும் மூகூர்த்த நாளையொட்டி திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மக்கள் கூட்டம் அலைமோதியது.
தொழில் நகரமான திருப்பூரில் போதுமான உள்கட்டமைப்பு வசதி மற்றும் விரிவான சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் என்பது தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளது. திருப்பூர் மாநகரில் குமரன் ரோடு, ரெயில்வே மேம்பாலம், பழைய பஸ் நிலையம், ஊத்துக்குளி ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும். அதே நேரம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலுல் இருக்காது. மக்கள் கூட்டம் மட்டுமே அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதாலும், நேற்றும், இன்றும் முகூர்த்த நாள் என்பதாலும் திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற திருமணம், சடங்கு, காதணி விழா, திறப்பு விழா உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதற்காக இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதேபோல் திருப்பூர் பழைய, புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் சந்திப்பு, புது மார்க்கெட் வீதி, பூ மார்க்கெட், முக்கிய கடை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா, தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

Next Story