லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் மனு
லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி மதுரை மாநகராட்சி மேயரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் ெசயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கலந்துகொண்டார். அவரை, கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீய கிசான் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டத்தை கைவிடவேண்டும். அதற்கு பதிலாக வைகை அணையில் இருந்து மதுரை குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி இருந்தனர்.
Related Tags :
Next Story