வேலூர் ஜெயிலில் இருந்து தப்பியோடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்


வேலூர் ஜெயிலில் இருந்து தப்பியோடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 13 March 2022 8:31 PM IST (Updated: 13 March 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஜெயிலில் இருந்து தப்பியோடிய கைதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

வேலூர்

பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் நந்தா என்ற முத்துக்குமார் (வயது 27). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி வேலூர் ஜெயில் காவலர் பயிற்சி பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துக்குமார் தப்பியோடினார். இதுகுறித்து பாகாயம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தப்பியோடிய முத்துக்குமாரை ஜெயில் அலுவலர்கள் அடங்கிய குழுவும், பாகாயம் போலீசார் அடங்கிய மற்றொரு குழுவும் தீவிரமாக தேடி வருகிறார்கள். பள்ளிக்கொண்டா மலைப்பகுதியில் உள்ள குழிகளில் மறைந்து பதுங்கியிருந்த முத்துக்குமாரை சில நாட்களாக அதிவிரைப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதற்கிடையே முத்துக்குமார் அங்கிருந்து வெளியேறி சென்னையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், ஜெயிலர்கள் அடங்கிய குழுவினர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடியும் அவர் பிடிபடவில்லை. 21 நாட்கள் ஆகியும் முத்துக்குமாரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். செல்போன் பயன்படுத்தாததால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story