பணத்தகராறில் பைனான்சியர் குத்திக்கொலை


பணத்தகராறில் பைனான்சியர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 13 March 2022 8:36 PM IST (Updated: 13 March 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

ஏனாமில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பைனான்சியர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி, மார்ச்.13-
ஏனாமில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பைனான்சியர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை
புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான ஏனாமை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ் (வயது 55). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கும் இடையே ஏலச்சீட்டு நடத்தி பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் வெங்கடேஸ்வரராவின் வீட்டிற்கு நாராயணசாமி சென்றார்.
குத்திக்கொலை
அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாராயணசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேஸ்வரராவை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு வயிறு, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. உடனே நாராயணசாமி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வரராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நாராயணசாமியை கைது செய்தார்.
----

Next Story