காவேரிப்பாக்கம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா


காவேரிப்பாக்கம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
x
தினத்தந்தி 13 March 2022 9:05 PM IST (Updated: 13 March 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்தவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 8-ந் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து கீசகன் வதம், கிருஷ்ணன் தூது, அரவாண் மோகினி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது. 

விழாவில் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story