மருத்துவ நலத்திட்டங்களில் 3-வது இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டத்துக்கு விருது
3-வது இடம் பிடித்ததற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தொடர்பான நலத்திட்டங்களுக்காக 2021- 2022 -ம் ஆண்டில் மாநில அளவில் 3-வது இடம் திருவள்ளூர் மாவட்டம் பிடித்தது. 3-வது இடம் பிடித்ததற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.
அவருடன் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுப்பணித்துறை செயலாளர் ஜெகநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story