நீலகிரியில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரியில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 246 மையங்களில் பொதுமக்களுக்கு முதல் டோஸ், 2-வது டோஸ். பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.
மேலும் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு முகாமில் முதல் டோஸ் 93 பேர், 2-வது டோஸ் 1,101 பேர், பூஸ்டர் டோஸ் 1,001 பேர் என மொத்தம் 2,195 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நீலகிரியில் இதுவரை முதல் டோஸ் 5 லட்சத்து 45 ஆயிரத்து 131 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கும் என மொத்தம் 10 லட்சத்து 76 ஆயிரத்து 290 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story