மேல்மலையனூர் அருகே கோகிலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
மேல்மலையனூர் அருகே கோகிலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த பெரியநாயகி சமேத தேயா பிறையான் என்கிற கோகிலேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் இங்கு விநாயகர், முருகப்பெருமான், பெரியநாயகி. அய்யப்பன், வரதராஜபெருமாள், ரேணுகாம்பாள் ஆகிய சுவாமி சன்னதிகளும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, தனபூஜை, தம்பதியர் பூஜை, யாகசாலை பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் நேற்று காலை 11.15 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம்புறப்பட்டு கோவிலை வலம் வந்ததும் 11.30 மணிக்கு அனைத்து கோபுர கலசங்களின் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர் சாமிகளுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமி வீதி உலா, கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கை ஆகியவை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story