திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை
திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்ன ஆனைவாரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம், புஷ்பக் கரகம் அமைத்தல், பாவாடைராயனுக்கு மகா கும்ப படையல், சிலம்பாட்டம், பம்பை உடுக்கை, பூங்கரகம், தாரை தப்பட்டையுடன் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் நேற்று காலை 7 மணிக்கு பக்தர்கள் அக்னிச்சட்டியுடன் அங்கபிரதட்சணம் செய்து ஆலயத்தை சுற்றிவருதல், சக்தி கரகம் சோடித்தல், ரணகளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேளதாள இசையுடன் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் அங்காளம்மன் எழுந்தருள அங்காளம்மன், பாவாடைராயன், காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களுடன் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மயானத்தை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு கொழுக்கட்டை படையல், அபிஷேக, ஆராதனைகளுடன் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் குறிசொல்லுதல், அன்னதானம், அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story