விழுப்புரம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்


விழுப்புரம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 13 March 2022 9:50 PM IST (Updated: 13 March 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 20-வது பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் கவுதமன் தலைமையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மாதவன், ஊரக வளர்ச்சி துறையின் ஓய்வு பெற்ற மேலாளர் திருநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமிகாந்தன் வரவேற்றார்.

வி.ஆர்.பி. பள்ளி தாளாளர் சோழன் சிறப்புரையாற்றி உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். செயலாளர் வாசுதேவ கலிவரதன், பொருளாளர் பழனி ஆகியோர் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை வாசித்தனர். முன்னதாக, கொரோனாவால் இறந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சங்க உறுப்பினர்கள் இறந்தால் ஈமசடங்கு செய்ய அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், குடும்ப நல பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்துதல், மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பரமசிவம் நன்றி கூறினார்.

Next Story