மத்தூர் அருகே கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து 3 ஆயிரம் கோழிகள் கருகி செத்தன
மத்தூர் அருகே கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் கருகி செத்தன.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பொம்மேபள்ளி காளியப்ப கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா. இவர் தனது வீட்டிற்கு அருகே கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கோழிப்பண்ணையில் திடீரென தீ பிடித்து மளமளவென எரிந்தது. இதுகுறித்து பர்கூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் கோழிப்பண்ணை முற்றிலும் எரிந்து சேதமானது. பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழிகளும் தீயில் கருகி செத்தன. இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story