கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மூழ்கி பெங்களூரு வெல்டிங் பட்டறை தொழிலாளி பலி


கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மூழ்கி பெங்களூரு வெல்டிங் பட்டறை தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 March 2022 10:17 PM IST (Updated: 13 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி பலியானார்.
பெங்களூரு தொழிலாளி 
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.அள்ளியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 34). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் ஊத்தங்கரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். பின்னர் நேற்று மதியம் காளிதாஸ், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வந்து அணையில் இறங்கி குளித்தார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் அணை தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கி பலியான காளிதாசின் உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணை 
இதைத் தொடர்ந்த போலீசார், காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெல்டிங் தொழிலாளி அணையில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த காளிதாசிற்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story