இந்திய கம்யூனிஸ்டு பேரவை கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு பேரவை கூட்டம் நடந்தது.
வேளாங்கண்ணி:-
கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேரவை கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பந்தம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரபோஜி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நாகையில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள பொது கூட்டத்தில் கீழையூரிலிருந்து 100 வாகனங்களில் கலந்து கொள்வது, 100 நாள் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களை காலை 8 மணிக்கு வேலைக்கு அழைப்பதை மாற்ற வேண்டும், கைக்குழந்தைகள் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைசெய்யும் இடத்திலேயே தொட்டில் கட்டி பாதுகாக்க அனுமதி வழங்க வலியுறுத்துவது, வேலை செய்வோருக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். 100 நாள் வேலையை 10 மணிக்கு தொடங்க கோரி அடுத்த மாதம்(ஏப்ரல்) 4-ந்தேதி கீழையூரில் சாலை மறியல் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story