அபாய நிலையில் மின்கம்பம்
அபாய நிலையில் மின்கம்பம் உள்ளது.
திட்டச்சேரி:-
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏனங்குடி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருமருகல்-நன்னிலம் மெயின் சாலையில் ஏனங்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து வளைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாலையில் சாய்ந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. நாகூர், நாகப்பட்டினம், திட்டச்சேரி, திருமருகல், நன்னிலம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளுக்கு சென்று வர இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இதை கவனித்து உடனடியாக வளைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story