பெருங்குடியில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், பெருங்குடி கிராமத்தில் ராஜாங்கம் சேர்வை நினைவு கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசான ரூ,20,054-ஐ கொடும்பாளூர் மூவர் ஐவர் அணியும், 2-வது பரிசான ரூ.15,054-ஐ பூங்கொடி இளம் பறவை அணியினரும், 3-ம் பரிசான ரூ.10,054-ஐ பெருமாநாடு இணைந்த கைகள் அணியினரும், 4-ம் பரிசான ரூ.10,054-ஐ புதுகைவடுவூர் அணியினரும் பெற்றனர். முன்னதாக போட்டியை பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கபடி போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த அணியினருக்கும் பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story