பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
நாமக்கல்:
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரக்ஷித் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிபடி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும். தற்போது பதவி உயர்வில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து, அதனை எமீஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story