ஏ.மேட்டுப்பட்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஏ.மேட்டுப்பட்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்கள் சிலவற்றில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரியனின் நேரடி ஒளி பட்டு ஜொலிக்கும். இந்த நிகழ்ச்சியை சூரிய வழிபாடு என்று கூறுவர். சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படும் நேரத்தில், வழிபடுவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.
நாமக்கல் மாவட்டம் ஏ.மேட்டுப்பட்டியில் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சாமி, சிவகாமியம்மன் சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் 27, 28, 29-ந் தேதிகளில் சூரிய வழிபாடு நடந்து வருகிறது. இந்த ஆண்டு 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் சூரிய வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story