9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில் அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பள்ளி தமிழ் ஆசிரியை அருள் செல்வி தான் காரணம் என்று கூறி பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பள்ளிக்கு நேரில் சென்றனர். அவர்கள் புகார் கூறப்பட்ட ஆசிரியை அருள் செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்தாரா? என்று கேட்டனர். மேலும் தலைமை ஆசிரியை ரங்கநாயகி மற்றும் பிற ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story