குமரியில் 2-வது கட்ட தடுப்பூசியை 48,650 பேர் செலுத்தவில்லை


குமரியில் 2-வது கட்ட தடுப்பூசியை  48,650 பேர் செலுத்தவில்லை
x
தினத்தந்தி 13 March 2022 11:24 PM IST (Updated: 13 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கால அவகாசம் முடிந்த நிலையில் 2-வது கட்ட தடுப்பூசியை 48,650 பேர் செலுத்தவில்லை என்று அதிகாரி கூறினார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கால அவகாசம் முடிந்த நிலையில் 2-வது கட்ட தடுப்பூசியை 48,650 பேர் செலுத்தவில்லை என்று அதிகாரி கூறினார்.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தீவிரப்படுத்தப்பட்டதால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது நடத்தப்பட்டு வரும் சளி பரிசோதனையில் கொரோனா பரவல் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்துள்ளது. 
குமரி மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 11 ஆயிரத்து 545 பேர் முதற்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 9 லட்சத்து 85 ஆயிரத்து 870 பேர் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அதன்படி இன்னும் 2 லட்சத்து 25 ஆயிரத்து 675 பேர் 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்த வேண்டும். எனவே விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
48,650 பேர்
ஆனால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால், ஏற்கனவே முதல் கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. தற்போது 2-வது கட்ட தடுப்பூசி போட வேண்டி இருப்பவர்களில் 48 ஆயிரத்து 650 பேர்களுக்கு கால அவகாசம் முடிந்த நிலையிலும் இன்னும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவ்வாறு 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story