‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 March 2022 12:30 AM IST (Updated: 13 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

வேகத்தடை வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் தண்டலை ஊராட்சியில் தியானபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் திருவாரூர்- மன்னார்குடி சாலை இணையும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பழுதடைந்த மின்மாற்றி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா  செருமங்கலம் கிராமத்தில் வடக்குத் தெருவில் சிவன் கோயில் அருகில் ஆபத்தான நிலையில் மின் மாற்றி ஒன்று உள்ளது.  இந்த மின்மாற்றி கடந்த சில மாதங்களாக பழுதடைந்து பழுதாகி உள்ளது. இதனால் அந்த மின்மாற்றிக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மின்மாற்றியும் பழுதடைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி மின்மாற்றி பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அடிக்கடி தீப்பொறி வெளியேறுகிறது.  இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், செருமங்கலம்.

Next Story