சிமெண்டு நிறுவன மேலாளர் எனக்கூறி நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடி
சிமெண்டு நிறுவன மேலாளர் எனக்கூறி நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர்,
சிமெண்டு விற்பனை கடை
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் அப்பகுதியில் சிமெண்டு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் முகமது அலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி தான் பிரபல சிமெண்டு நிறுவனத்தின் மேலாளராக இருப்பதாகவும் 850 சிமெண்டு மூட்டைகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி அதற்குரிய விலைப்பட்டியலை (கொட்டேஷன்) முகமது அலி வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய முகமது அலி அந்த ஆசாமி கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
சைபர் கிரைம் போலீசில் புகார்
ஆனால் அந்த ஆசாமி கூறியபடி சிமெண்டு மூட்டைகள் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆசாமியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது அலி கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப் பதிவு செய்து சிமெண்டு கம்பெனி மேலாளர் எனக்கூறி நூதன முறையில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story