கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது


கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 12:25 AM IST (Updated: 14 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை, 
மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 32). சம்பவத்தன்று இவர், அந்தபகுதியில் உள்ள சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் (27), முத்தையா (26) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி விஜய்யிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து விஜய் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், முத்தையா ஆகியோரை கைது செய்தனர். 

Next Story