பங்குனி திருவிழா 108 சங்காபிஷேகம்


பங்குனி திருவிழா 108 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 14 March 2022 12:32 AM IST (Updated: 14 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி திருவிழா 108 சங்காபிஷேகம் நடந்தது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ளது கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில்.  விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ம் நாள் திருவிழாவில் அன்று காலை கேடக விமானத்திலும், இரவு பூதகி வாகனத்திலும் வீதி உலா நடந்தது. மதியம் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story