ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன மேலாளர் பலி
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.
வெள்ளியணை,
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே உள்ள லட்சுமணபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது தாய், தந்தையை பார்ப்பதற்காக பஸ் மூலம் கரூர் வந்தார். பின்னர் காந்தி கிராமத்தில் உள்ள தனது நண்பரின் ஸ்கூட்டரை வாங்கி கொண்டு லட்சுமணபட்டிக்கு ஏமூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் சென்று நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story