அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது


அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 12:46 AM IST (Updated: 14 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் மற்றும் கிராம உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் செம்மினி பட்டியிலிருந்து குட்லாடம்பட்டி செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மண்ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி  மண் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் பிரபு (வயது 35), கோவிந்தராஜ் (30), ஹரீஸ் (22) ஆகிய 3 பேரையும் வாடிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story