ஐநூற்று நங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஐநூற்று நங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 March 2022 1:15 AM IST (Updated: 14 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு விஜயநாராயணம் ஐநூற்று நங்கை அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் ஐநூற்று நங்கை அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஐநூற்று நங்கை அம்மன் கோவில்
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் பிரசித்தி பெற்ற ஐநூற்று நங்கை அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை வடக்கு விஜயநாராயணம் தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன், சிந்து முருகன், எம்.எஸ்.விஜய ராகுல், எம்.எஸ்.நகுல் ராஜா, ராசையா தேவர் குடும்பத்தினர் புனரமைத்து புதுப்பொலிவுடன் புதிதாக கட்டிக் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை, கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள், அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி, முதலாம் யாகசாலை பூஜை, 2-ம் யாகசாலை பூஜை, 3-ம் யாகசாலை பூஜைகள், மருந்து சாத்துதல், யந்திர ஸ்தாபனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

கும்பாபிஷேகம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. காலையில் 4-ம் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கோவில் விமானத்துக்கும், ஐநூற்று நங்கை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் புஷ்பாஞ்சலி, தீபாராதனை, இரவில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தல், அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி, கும்பாபிஷேக திருப்பணி, கோவில் உபயதாரர் தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகன், சிந்து முருகன், எம்.எஸ்.விஜய ராகுல், எம்.எஸ்.நகுல் ராஜா, ராசையா தேவர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Next Story