கடையநல்லூர் யூனியன் கூட்டம்
கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் கந்தசாமி வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசல பாண்டியன், கீதா மணிகண்டன், சிங்கிலிபட்டி மணிகண்டன், சண்முகையா, மாரியம்மாள், மாரிச்செல்வி, சித்ரா, ரோஜா, சத்யகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சொக்கம்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம்-2020-21 திட்டத்தில் கருப்பாநதி அணைக்கட்டு அருகில் உள்ள ஊராட்சி கிணற்றில் இருந்து மந்தை தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் விரிவாக்கம் செய்வது, கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக தினக்கூலி அடிப்படையில் மஸ்தூர் பணியாளர்கள் மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி நியமனம், கடையநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்ட 34 சுகாதார பணியாளர்களுக்கு ஊதியத்தொகை வழங்குவது, 15-வது மத்திய நிதிக்குழு மானியம் 2022-23-ம் ஆண்டிற்கு கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்றியக்குழு மூலம் பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story